Friday 22 December 2017

எது உச்சம்?







எது உச்சம்?

தற்போது, பங்குச் சந்தை உச்சத்தில் உள்ளது. ‘இப்போது முதலீடு செய்யலாமா அல்லது கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யலாமா?’ என்று கேட்கின்றனர். மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், ஜனவரி 8, 2008-ல் 20,873 புள்ளிகள்; இன்று 33,000 புள்ளிகள். கடந்த 10 வருடங்களில் 50% உயர்ந்துள்ளது. அப்போது அது உச்சம் என்று நினைத்து, அதில் முதலீடு செய்யாமல் போயிருந்தால், நம் முதலீடு 50% வளரும் வாய்ப்பை நாம் இழந்திருப்போம். எனவே, நீண்ட கால முதலீடு செய்பவர்கள் உச்சமா, குறைவா என்பதைப் பார்க்காமல் இருப்பது நல்லது. 

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் முதலீட்டில் பொறுமை மிக அவசியம். பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு அஞ்சக் கூடாது. பங்குச் சந்தை ஒரே சீராகச் செல்லாது. அது, கடல் அலையைப் போன்று கடற்கரையில் ஆர்ப்பரிக்கும்; உள்ளே சென்றால் மிக அமைதியாக இருக்கும். 

நம் முதலீடு, முதல் சில வருடங்களில் அதிகமாக ஏறியிறங்கி காணப்படும். நீண்ட கால அடிப்படையில் அது நம்மைப் பாதிக்காது.

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



No comments:

Post a Comment